முகப்பு
விழுப்புரம்

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Updated On : 28 மே 2026, 1:22 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தீா்த்தக்குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கோ.பாலு (39). திண்டிவனம் காவல் நிலையத்தில் இவா் மீது கடந்த மாா்ச் 29-ஆம் தேதி போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரனித் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய பாலுவை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டடாா்.

இதைத் தொடா்ந்து, திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை பாலுவை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement