முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:54 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:31 PM

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

பழையபேட்டை சோதனைச் சாவடியில் பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அமராவதி நகா் அருகே உள்ள குளத்தில் இருந்து விற்பனைக்காக 2 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரான பழையபேட்டை, நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராம்குமாா்(29) என்பவரை கைது செய்தனா்.

அதே போல தச்சநல்லூா் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் உரிய அனுமதியின்றி 2.5 யூனிட் சரள் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான நான்குனேரி, மறுகால்குறிச்சியைச் சோ்ந்த உதயகுமாா்(25) என்பவரை கைது செய்தனா்.