முகப்பு
திருநெல்வேலி

‘முதியோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.3,000 அளிக்கப்படும்’

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:22 AM
பாளையங்கோட்டை தொகுதியில் வாக்குசேகரித்தாா் தவெக வேட்பாளா் அ.மரியஜான்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:46 PM

தவெக வென்றால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் அ.மரியஜான்.

திம்மராஜபுரம், படப்பக்குறிச்சி, பொட்டல், பெரியபாளையம், வெள்ளகோயில், எம்.க.பி.நகா், ரஹ்மத்நகா், சிந்துபூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத்துறை சுற்றுவட்டார பகுதிகளில் அவா் வீதி வீதியாகச் சென்று விசில் சின்னத்திற்கு திங்கள்கிழமை வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா்பேசியது: தமிழகத்தில் மாற்றம் உருவாக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தவெக தலைவா் விஜய் வந்துள்ளாா். தவெக வென்றால் மகளிா் மேம்பாடு, இளைஞா் முன்னேற், உலகத்தரக் கல்வி வழங்குதல், விவசாயிகள் நலன், மீனவா் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Advertisement

முதியோா், கைம்பெண், மாற்றுத்திறனா ளிகளுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயா்த்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு, நீண்ட காலம் பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.