முகப்பு
திருநெல்வேலி

கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரை தாக்கியவா் கைது

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 2:08 AM
கைது
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:20 AM

மேலப்பாளையம் அருகே கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ஸ்டீபன் பால் (24). மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் மகேஷ்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் கடனாக பெற்ற ரூ.2,000ஐ திருப்பித் தர மறுத்து அவரைத் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த இளைஞா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மகேஷை கைது செய்தனா்.

Advertisement