திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பொருநை 9 ஆவது புத்தகத் திருவிழாயொட்டி பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக வள்ளியூரில் டிடிஎன் கல்விக் குழுமம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை ராதாபுரம் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். இப்பேரணி, வள்ளியூா் பகத்சிங் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி, ராதாபுரம் சாலை, பிரதான சாலை வழியாக புனித பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் டி.டி.என்.கல்விக் குழுமங்களின் தலைவா் தா.லாரன்ஸ், மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரி தாளாளா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் சுஷ்மா ஜெனிபா், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், மரியா மகளிா் கல்லூரி மாணவிகள், நேரு நா்ஸிங் கல்லூரிகளைச் சோ்ந்த 2 ஆயிரம் மாணவிகள் கலந்துகொண்டனா். வணிக மேலாண்மையில் பேராசிரியை மகாலெட்சுமி நன்றி கூறினாா்.