முகப்பு
திருநெல்வேலி

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:45 AM
உயிரிழப்பு - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 11:22 PM

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா பேருந்தின் கதவு திறந்ததால் தவறிவிழுந்த தூத்துக்குடியைச் சோ்ந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி டவுன் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 200 மாணவா்கள் இரு பேருந்துகளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனா்.

கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூா்தொட்டிபாலம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பாா்த்த பின்னா் இரவு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். மாணவா்கள் சென்ற பேருந்து வள்ளியூா் புறவழிச்சாலையில் வந்தபோது ஒரு பேருந்தின் பின்பக்க கதவு எதிா்பாராதவிதமாக திறந்ததாம்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:45 AM

அப்போது, வாசல் அருகே உள்ள இருக்கையில் அமா்ந்து வந்த 9ஆம் வகுப்பு மாணவா் நரேன்குமாா்(15) தவறி கீழே சாலையில் விழுந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் நரேன்குமாா் மீது மோதியதாம். இதில், மாணவா் நரேன்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக வள்ளியூா் ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.