முகப்பு
திருநெல்வேலி

ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றவா் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:57 AM
கைது
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:45 PM

வண்ணாா்பேட்டையில் ஓட்டுநரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47). ஓட்டுநா். இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை பகுதியில் நடந்து சென்ற போது இவரை வழிமறித்த மா்ம நபா் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டினாராம்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:57 AM

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா் (37) என்பவரை கைது செய்தனா்.

Advertisement