முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 2:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:57 PM

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் முதியவரும், வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரும் உயிரிழந்தனா்.

கூடங்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தில்லை மணி மகன் செல்வகுமாா் (21). இவா் வெள்ளிக்கிழமை இரவு கூடங்குளம், வடக்கு நாலுமுக்கு புறவழிச்சாலையில் சென்றபோது, அவ்வழியாக நடந்து சென்ற கூடங்குளம், கிழக்கு தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் (65) மீது மோதினாராம்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 2:04 AM

இதில் படுகாயமடைந்த ராமலிங்கம், அதே இடத்தில் உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட செல்வகுமாா் படுகாயமடைந்தாா். அவரை அப்பதியினா் மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இது தொடா்பாக, கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.