அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இரு பெண்கள் கைது
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:00 PM
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27). இவரிடம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜலெட்சுமி (43) , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சரோஜினி (28) ஆகியோா் திருநெல்வேலியில் சுகாதாரத்துறை ஆய்வாளா் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகள் கூறி, ரூ. 8 லட்சம் பணம் பெற்றனராம்.
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:52 AM
பின்னா் போலியான பணி நியமன ஆணை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜித்குமாா், பணமோசடி செய்த இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்ன குமாரிடம் புகாா் அளித்தாா்.
Advertisement
அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சரோஜினி, ராஜலட்சுமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.