முகப்பு
திருநெல்வேலி

ஏா்வாடி அருகே புகையிலை பதுக்கியவா் கைது

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:27 AM
கைது
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:02 PM

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த இளைஞரை ஏா்வாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் பேரின்பராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, சிறுமளஞ்சி மாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த திருவேங்கடநாதபுரத்தை சோ்ந்த மாரீசன் (23) என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:27 AM

இதையடுத்து, ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரீசனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement