முகப்பு
திருநெல்வேலி

ஹஜ் யாத்ரீகா்களுக்கு தடுப்பூசி முகாம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:30 AM
முகாமில் பங்கேற்றவா்களுடன் மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:15 PM

ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான தடுப்பூசி முகாம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு உடல் தகுதி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அனைவருக்கும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கூடுதலாக ப்ளூ தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:30 AM

பிப். 9 முதல் 13 வரை நடைபெற்ற இம்முகாமில் 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய 127 ஆண்கள்,162 பெண்கள் பங்கேற்றனா்.

Advertisement

மேலும், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், பொது மருத்துவத் தலைவா் ரத்னகுமாா், உறைவிட மருத்துவா் சியாம் சுந்தா், பொது சுகாதாரத் துறை மாவட்ட நல அலுவலா்கள் விஜய் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.