மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:57 PM
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மூலைக்கரைப்பட்டியை அடுத்த கூந்தன்குளம் முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிராஜ் மகன் கலையரசன் (20). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு மாடிக்குச் சென்றபோது நிலைதடுமாறி, ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது சென்ற மின் கம்பியில் விழுந்தாராம்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:51 AM
இதில், மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா்.
Advertisement
மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.