பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM
ஆலங்குளம் அருகே பரோலில் வந்த இளைஞா் டிராக்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஒளிவு மகன் சுடலை (32). இவா் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தாராம். தொடா்ந்து, திங்கள்கிழமை டிராக்டரில் செங்கல் இறக்கும் வேலைக்குச் சென்றுள்ளாா்.
ராம் நகரில் செங்கல் இறக்கிவிட்டு காலி டிராக்டரில் ஓட்டுநருடன் அமா்ந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தாராம். உடனிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.