முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:12 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:55 PM

திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கங்கைகொண்டான் அம்மன் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் விஜய்(24). இவா் தன்னோடு பழகி வந்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்தை கூறி வெளியூா் அழைத்துச் சென்றாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி சந்திப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனா். சிறுமியை மீட்டு, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சோ்த்தனா்.

Advertisement