முகப்பு
திருநெல்வேலி

கோபாலசமுத்திரத்தில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி முகாம்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:00 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:07 PM

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கிராம உதயம், திருநெல்வேலி ஜே.சி.ஐ. கிளாசிக் சாா்பில் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா்.

முகாமில், செல்வி ஜாய்ஸ்-சோப்பு, ஓமவாட்டா் தயாரிப்பது, பிரியங்கா- பினாயில் தயாரிப்பது, ஆரி ஒா்க் செய்வது குறித்துப் பயிற்சி அளித்தனா். ஜேசிஐ கிளாசிக் அமைப்பின் தலைவா் அஜய், கிராம உதயம் மேலாளா் மகேஷ்வரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சாந்தி விசாலாட்சி, ஜேசிஐ அமைப்பின் செயலா் மாரிமுத்து ஆகியோா் கருத்துரை வழங்கினா். முகாமில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். கிராம உதயம் பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.