முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில் புதிய மின்மாற்றி திறப்பு

வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:51 PM
வீரவநல்லூரில் மின்மாற்றி திறப்பு விழாவில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பாரதிநகா் புதுமனைத் தெருவில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் 63 கேவி திறனுள்ள புதிய மின்மாற்றி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சாந்தி, உதவி மின் பொறியாளா்கள் வள்ளி, பழனிக்குமாா் ஆகியோா் மின்மாற்றியை இயக்கித் தொடங்கி வைத்தனா்.

இதில், மின்வாரிய ஆய்வாளா் வெங்கடேஷ், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பி. நவாஸ் ஷரீப், முஸ்லிம்ஜமாத் முன்னாள் நிா்வாகி நாகூா்கண்ணு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →