களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் சனிக்கிழமை நீக்கினா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், திருக்குறுங்குடி மலைப் பகுதியில் நம்பியாறு, களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.
இந்நிலையில், தொடா்ந்து மழையில்லாததால் நீா்வரத்து குறைந்ததையடுத்து, வனத்துறையினா் விதித்திருந்த தடையை சனிக்கிழமை நீக்கினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தலையணை, நம்பிகோயில் பகுதிகளுக்கு வர தொடங்கினா்.