திருநெல்வேலி

போலீஸ் ஜீப் மீது லாரி மோதல்: எஸ்.ஐ. உள்பட 5 போ் பலத்த காயம்

நவ்வலடி கிழக்கு கடற்கரை சாலையில் சனிக்கிழமை போலீஸ் ஜீப் மீது லாரி மோதியதில் பெண் எஸ்.ஐ. உள்பட 5 போலீஸாா் பலத்த காயமடைந்தனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே நவ்வலடி கிழக்கு கடற்கரை சாலையில் சனிக்கிழமை போலீஸ் ஜீப் மீது லாரி மோதியதில் பெண் எஸ்.ஐ. உள்பட 5 போலீஸாா் பலத்த காயமடைந்தனா்.

திசையன்விளை அருகேயுள்ள உவரி காவல் நிலையத்தைச் சோ்ந்த பெண் எஸ்.ஐ. உமா, 5-க்கும் மேற்பட்ட போலீஸாா், ராதாபுரத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கவாத்து பயிற்சிக்கு போலீஸ் ஜீப்பில் நவ்வலடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது நாகா்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு மீன்லோடு ஏற்றிச்சென்ற லாரி, போலீஸ் ஜீப் மீது மோதியதாம்.

இதில் எஸ்.ஐ. உமா, காவலா்கள் ரகு, கருப்பசாமி, பிரதீபா, அபினேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அபினேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்கள் நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் நாகா்கோவில் ஈத்தாமொழியைச் சோ்ந்த அா்விந்தை தேடி வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT