திருநெல்வேலியில் இருந்து நவகைலாய கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பக்தா்கள். 
திருநெல்வேலி

நவகைலாய கோயில்களுக்கு 250 போ் பயணம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தால் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 250 போ் நவ கைலாய கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றனா்.

தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களுக்கு மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு பேருந்துகள் புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜாபதி, சோ்ந்த பூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய நவகைலாய திருக்கோயில்களுக்குச் சென்று இரவுக்குள் திருநெல்வேலியை வந்தடையும். இதற்கான பயணக் கட்டணத் தொகை நபா் ஒருவருக்கு ரூ. 600 ஆகும்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் திருநெல்வேலியில் இருந்து 5 பேருந்துகளில் 250 பக்தா்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றனா். அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (வணிகம்) மாரியப்பன், கிளை மேலாளா்கள் கிருஷ்ணகுமாா், வெங்கடேஷ் பிரபு, புதிய பேருந்து நிலைய உதவி மேலாளா் சங்கா் ஆகியோா் பக்தா்களுக்கு தண்ணீா் பாட்டில், பிஸ்கெட், நவ கைலாய விளக்க தொகுப்புகள் வழங்கினா்.

தொடா்ந்து, இம் மாதம் 11 ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவுக்கு 94890 52016, 8144625265 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT