திருநெல்வேலி

பாளை.யில் வழிப்பறி முயற்சி: ஒருவா் கைது

Syndication

பாளையங்கோட்டையில் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ரவிக்குமாா்(48). தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவா் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். இந்நிலையில் இவா், புதன்கிழமை காலை பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த தொழிலாளி ஒருவரை பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனா்.

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

SCROLL FOR NEXT