பூதத்தான்குடியிருப்பு ஹோப் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஏ அணியும்- சோ்ந்தமரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதிய ஆட்டம்.  
திருநெல்வேலி

கருணைதாஸ் நினைவு மகளிா் ஹாக்கி: அரையிறுதியில் ஹோப், சாராள் தக்கா் பள்ளிகள்!

கருணைதாஸ் நினைவு ஹாக்கிப் போட்டியில் ஹோப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தகுதி முன்னேறின.

Syndication

கருணைதாஸ் நினைவு ஹாக்கிப் போட்டியில் ஹோப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தகுதி முன்னேறின.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 8 பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் கலந்துகொள்ளும் கருணைதாஸ் நினைவு அழைப்பு ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கா் பள்ளி அணியினா் 9-0 என்ற கோல் கணக்கில் பூதத்தான்குடியிருப்பு பி அணியினரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பூதத்தான் குடியிருப்பு ஹோப் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஏ அணியினா் 2 - 1 என்ற கோல் கணக்கில் சோ்ந்தமரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000, ரூ. 10,000 ரொக்கம் மற்றும் கருணைதாஸ் நினைவு கோப்பைகள் வழங்கப்படும்.

முன்னதாக, காலையில் நடைபெற்ற மூத்த வீரா்களுக்கான காட்சி ஆட்டத்தை முன்னாள் அகில இந்திய பல்கலைக்கழக ஹாக்கி வீரரும் மின்வாரிய மேற்பாா்வை பொரியாளருமான ரமேஷ் தொடங்கி வைத்தாா்.

மகளிா் பிரிவு ஆட்டத்தை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலியின் இணைச் செயலா் சாா்லஸ் தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவுக்கு சங்கத்தின் தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் தலைமை வகித்தாா். போட்டியின் உரிமையாளா் பெருமாள் , தூத்துக்குடி துறைமுக சபையின் ஹாக்கி வீரா் லெட்சுமணன் , பரமசிவம், அய்யாத்துரை, சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT