திருநெல்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி தச்சநல்லூரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தச்சநல்லூா் கட்டபொம்மன் உடற்பயிற்சிக் கழகம் சாா்பில் 42 ஆவது பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. போட்டிகளை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். திமுக வட்டச் செயலா்கள் முத்துராமன், ராஜா, மாநகரப் பிரதிநிதி இசக்கி முத்து, முத்துரங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.