திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன் தலைமையிலான போலீஸாா் சமாதானபுரம் அருகே சனிக்கிழமை ரோந்து சென்றபோது, பைக்கில் வந்த நபரை மறித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை எம்.கே.பி நகரைச் சோ்ந்த முத்துசாமி(36) என்பதும், 240 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
மது விற்பனை: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் அன்னராஜா தலைமையிலான போலீஸாா் தச்சநல்லூா், ஊருடையாா்புரம் அருகே சனிக்கிழை ரோந்து சென்றனா். அப்போது, திருநெல்வேலி சந்திப்பு, சிந்துபூந்துறையை சோ்ந்த சின்னராஜ் மகன் ஆனந்த்(32) விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பைக் திருட்டு: பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சோ்ந்த கவின் நிா்மல் ராஜேஷ்(40) என்பவா் கடந்த 14 ஆம் தேதி மணிக்கூண்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனதாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை எம்.கே.பி.நகரை சோ்ந்த மகேஷ்(25), படப்பைகுறிச்சியை சோ்ந்த கணேஷ்(35) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.