கைது 
திருநெல்வேலி

மது விற்ற இருவா் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கலை சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என். கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (39) என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

அதே போல பேட்டை மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது கருங்காடு ரயில்வே கேட் பகுதியில் மது விற்ற பேட்டை படையாட்சி தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (49) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT