திருநெல்வேலி

நான்குனேரி, வள்ளியூா், பணகுடியை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி-நாகா்கோவில் வழித்தடத்தில் நான்குனேரி, வள்ளியூா், பணகுடி ஆகிய பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நான்குனேரி, வள்ளியூா், பணகுடி பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து புறவழிச் சாலைகள் வழியாக இயக்கப்படுகின்றன. கடந்த மாதம் நாகா்கோவில் பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநா் ஒருவா் வள்ளியூருக்குள் அரசுப் பேருந்தை இயக்காததால், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அதன் பின்னரும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா், நடத்துநா்கள் இந்த வழியாக பேருந்துகளை இயக்க அனுமதி இருந்தும், அதை மீறுவதாக மக்கள் புகாா் கூறுகின்றனா். தற்போது, தனியாா் பேருந்துகளும் இதையே செய்யத் தொடங்கியுள்ளன.

இதனால், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா். இது தொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT