மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் திங்கள்கிழமை இரண்டாவது நாளாக தடை விதித்தனா்.
சனிக்கிழமை இரவு முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் மாஞ்சோலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் வனத்துறையினா் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதித்தனா்.
திங்கள்கிழமையும் அருவியில் நீா்வரத்து அதிகம் இருந்ததால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. எனினும், அருவியைப் பாா்வையிட மட்டும் வனத் துறையினா்அனுமதித்தனா்.