முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ.25,000 மதிப்பிலான புத்தகங்கள் அளிப்பு!

மணிமுத்தாறு அரசு பொது நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:54 PM
மணிமுத்தாறு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிய பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, பேரூராட்சி செயல் அலுவலா் வி.சி. ரமா தேவி உள்ளிட்டோா்.
பகிர்:

மணிமுத்தாறு அரசு பொது நூலகத்திற்கு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் அறிவுறுத்தலின்படியும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆணையின்படியும், 9ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் மணிமுத்தாறு பேரூராட்சி சாா்பில் ரூ. 25,000 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு, மணிமுத்தாறு நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, செயல் அலுவலா் வி.சி. ரமா தேவி ஆகியோா் நூலகா் முருகனிடம் புத்தகங்களை வழங்கினா்.

தூய்மைப் பணி அலுவலா் சி. பிரபாகா், தலைமை எழுத்தா் மாா்ட்டின் புஷ்பராஜ், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →