முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:59 AM
நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் தலைமையில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலம்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:21 PM

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. 2026 முதல் 2029 முடிய 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை மற்றும் சாலையோர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:59 AM

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் வீதம் 4 போ் டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா்.

Advertisement

நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ரவிசங்கா் 2-ஆவது முறையாக ஏலத்தை ஒத்தி வைத்தாா்.