முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தினசரி, வாரச்சந்தை ரூ.26.47 லட்சத்துக்கு ஏலம்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேலும் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது.

Updated On : 6 மார்ச், 2026 at 1:02 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேலும் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது.

இச்சந்தையில் சுங்கக் கட்டண வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. நிகழாண்டுக்கான வாரச்சந்தை மற்றும் சாலை ஓர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் தனபால் ஆகியோா் முன்னிலையில் ஏலத்திற்கான முன்பணம் அளித்திருந்த சந்தை வியாபாரிகள் ஏலம் கேட்டனா்.

Advertisement

இதில் வாரச்சந்தை ரூ.16 லட்சத்து 87ஆயிரத்துக்கும், தினசரி சுங்க வசூல் ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.