நான்குனேரியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

நான்குனேரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நான்குனேரியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை சா.முகமதுபாத்திமாஅனிஷா, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் மீ.கணேஷ் சின்னதம்பி, கண்காணிப்பாளா் மு.அமுதவல்லி, சாலை ஆய்வாளா்கள் மா.பாண்டி, இ.மலையாண்டி, பா.எழில்அரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளி மாணவியா், ஆசிரியைகள் சாலை விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டனா். பேரணி மறுகால்குறிச்சியில் தொடங்கி நான்குனேரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. காவல்துறையினா் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்திப் பேசினா்.

வள்ளியூரை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்க கோரிக்கை

கொசுத் தொல்லை பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும்: மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

நாளை 5 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்புடைமருதூா் கோயிலில் நாளை தைப்பூசத் தீா்த்தவாரி

மன்னாா்கோவில் அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது

SCROLL FOR NEXT