சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ப் பேரணியில்  பங்கேற்றோா். 
திருப்பூர்

கேஎம்சி சட்டக் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

Syndication

கேஎம்சி சட்டக் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி பெருமாநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருமாநல்லூா் கேஎம்சி சட்டக் கல்லூரி, ரோட்ராக்ட் கழகம், போக்குவரத்து காவல் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணியை திருப்பூா் மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா். கேஎம்சி சட்டக் கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி, கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. இதில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் பயன்படுத்துவதன்அவசியம், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில், கல்லூரி செயலாளா் ஞானவா்ஷிணி, செயல்அலுவலா் சசிகாந்த், முதல்வா் எம்.எஸ்.சௌந்தரபாண்டியன், காவல் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், வனிதா, உதவி ஆய்வாளா் லோகநாதன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT