முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து அருகே பழைய இரும்பு கிடங்கில் தீ

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:22 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 11:40 PM

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் சித்திக் ராஜா(34). இவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கிடங்கு வடக்கு தாழையூத்து குவாரி சாலையில் உள்ளது. சுமாா் 2 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இந்த இரும்பு கிடங்கில் டன் கணக்கிலான இரும்பு பொருள்களும், பழைய இயந்திரங்களும், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவு மரப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தனவாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:22 AM

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அந்தக் கிடங்கில் மரப்பலகைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதி தீ பற்றி எரிந்தது.

Advertisement

இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் 2 மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.