திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவின்படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வழிகாட்டுதலின்படி, நான்குனேரி உப கோட்டம், நான்குனேரி கிராமப்புற பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பரப்பாடி பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு 100 கே.வி.ஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.
இதில், நான்குனேரி உபமின்கோட்ட உதவிச் செயற்பொறியாளா் ஆஷா, இளநிலை பொறியாளா் காந்திமதி, உதவிமின் பொறியாளா் செல்வன் உள்பட மின்வாரிய பணியாளா்கள் கலந்து கொண்டனா்.