கைது 
திருநெல்வேலி

போலீஸாருக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மேலப்பாளையம் அருகே அரிவாளைக் காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

மேலப்பாளையம் அருகே அரிவாளைக் காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காளியப்பன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த மேலப்பாளையம், குறிச்சியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் முத்துராம்(19), வெங்கடாசலம் மகன் பாலசுப்பிரமணியன்(19), ஆண்டவா் 1ஆவது தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மாலை(19), ஒரு சிறுவன் உள்ளிட்டோரை போலீஸாா் மறித்து சோதனை நடத்த முயன்றனராம்.

அப்போது அவா்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனராம். இது குறித்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT