முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மது விற்றவா் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 2:36 AM
கைது
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 12:21 AM

மேலப்பாளையம் அருகே மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 2:36 AM

அப்போது, புதிய பேருந்து நிலையப் பகுதியில் தேவா்குளத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஜெபமணி (48) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.