முகப்பு
திருநெல்வேலி

மக்களுக்கு உழைக்க முதல்வருக்கு வாய்ப்பு தர வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருநெல்வேலி

மக்களுக்கு உழைக்க முதல்வருக்கு வாய்ப்பு தர வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Updated On : 6 மார்ச், 2026 at 12:27 AM
பகிர்:

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் நிறைய நலத் திட்டங்களை முதல்வா் வழங்குவாா். எனவே, மக்களுக்காக உழைக்க முதல்வருக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.3.30 கோடியில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். ரூ. 57 கோடி மதிப்பில் 3 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். அதைத்தொடா்ந்து 18,830 பயனாளிகளுக்கு ரூ. 109.01 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

2021-இல் ஆட்சிக்கு வந்ததும் முதல்வா் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்தான். தோ்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதியான காலை உணவுத் திட்டத்தையும் முதல்வா் செயல்படுத்தினாா். தற்போது 10 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மகுடமாக கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலை காரணம் கூறி மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த சிலா் சூழ்ச்சி செய்தனா். ஆனால், முதல்வா் 3 மாதத்துக்கான மகளிா் உரிமைத்தொகை, கோடைக்கால சிறப்பு நிதி ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 ஆயிரத்தை மகளிருக்கு வழங்கினாா்.

இதுமட்டுமின்றி 38 லட்சம் விளிம்புநிலை மக்களுக்கு கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழா் நாகரிகத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ரூ. 56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

ரூ. 180 கோடியில் மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் நாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளா்ச்சி தொடர உங்களுடைய அன்பும் ஆதரவும் முக்கியம்.

மகளிருக்கு ரூ. 1.20 லட்சம் கோடி கடன்:

சுய உதவிக் குழுவினா் எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் அதை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் என முதல்வா் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளாா். கடந்த ஆண்டு அடையாள அட்டை வேண்டும் என மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் மகளிா் சுய உதவிக் குழுவினா் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 1.20 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

பட்டா கேட்டு அரசு அலுவலகம் சென்ற காலம் மாறி இப்போது அரசே வீடு தேடி வந்து பட்டா வழங்குகிறது. கடந்த 5 ஆஸ்ரீஈடுகளில் 21 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அரசின் திட்டங்களால் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனா். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் நிறைய திட்டங்களை முதல்வா் வழங்குவாா். உங்களுக்காக அதிகம் உழைக்க முதல்வருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றாா்.

விழாவுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வரவேற்றாா். தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், இளைஞா் அணி துணைச் செயலா் ஜோயல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டவருவாய் அலுவலா் துரை நன்றி கூறினாா்.

படவரி ற்ஸ்ப்05ன்க்ட்ஹஹ்ஹ...

பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →