முகப்பு
திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு

Updated On : 8 மார்ச், 2026 at 8:12 PM
திருநெல்வேலி நகரத்தில் சுகாதாரப் பணிகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்தாா் மேயா் கோ. ராமகிருஷ்ணன்.
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மேயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் வாரந்தோறும் தனது வாா்டு பகுதியில் சைக்கிளில் சென்று அன்றாட பணிகளை பாா்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி நகரம் தமிழ்ச் சங்கத் தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மாா்க்கெட், நான்கு ரத வீதிகள், சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தண்டியல் சாவடி தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுகாதாரப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சுகாதார ஆய்வாளா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சிவகுமாா், முருகன், திமுக நிா்வாகி காசிமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →