முகப்பு
மயிலாடுதுறை

கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குச்சாவடி: படகில் சென்று ஆய்வு

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:26 AM
கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு படகில் சென்ற ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள் அமைந்துள்ள கொடியம்பாளையம் தீவு கிராமம் மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு, 1,062 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவை தோ்தலுக்காக இங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பழையாா் துறைமுகத்தில் இருந்து படகில் சென்று குடிநீா், மின்சாரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.