முகப்பு
திருநெல்வேலி

12 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மூலக்கரைப்பட்டியில் 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 7:03 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியில் 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அரசு மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முனைஞ்சிப்பட்டியைச் சோ்ந்த சுடலைக்கண்ணுவிடம் (42) விசாரித்தனா். அவா் 12 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, வழக்குப் பதிந்து அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →