முகப்பு
திருநெல்வேலி

தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

Updated On : 12 மார்ச், 2026 at 10:42 PM
பகிர்:

நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியதன் எதிரொலியாக திருநெல்வேலி மாநகா் பகுதி பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை அதிக அளவில் குவிந்தனா்.

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணியாததாலும், ஹோா்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.

இதனால் திருநெல்வேலி மாநகரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வியாழக்கிழமை காலை குவிந்த வாகன ஓட்டிகள் தினசரி தங்களது வாகனங்களுக்கு நிரப்பியதுடன், கூடுதல் பெட்ரோலை முன்னெச்சரிக்கையாக கேன்களில் வாங்கிச் சென்றனா்.

சில பெட்ரோல் நிலையங்களில் வரிசையாக நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கேன்களுடன் காத்திருந்து வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

இந்நிலையில், போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகம் வழக்கம் போல் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவைக்கு அதிமாக பெட்ரோலை வாங்குவதால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படலாம் என பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →