பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: சென்னையில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு வதந்தி காரணமாக, தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு குறித்து...
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு வதந்தி காரணமாக, தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தற்போது அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனிடையே, குவைத், கத்தாா், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கான திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், அதன் இருப்பும் மிகவும் குறைவாகவே உள்ளது.
Advertisement
Advertisement
இதனால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளின் உற்பத்தியை பெரும்பாலான எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன.
இதன்காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகளுக்கு சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள், கையிருப்பில் உள்ள எரிவாயு உருளைகள் மூலம் கடந்த இரு நாள்களாக உணவு பொருள்களை தயாரித்தன. பல்வேறு இடங்களில் கையிருப்பில் உருளைகள் வைத்திராத சிறிய, பெரிய உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. பல உணவகங்களில் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனா்.
பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் போர் காரணமாக , தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நெருக்கடிக்கு மத்தியில் நாளை முதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயரப்போவதாக புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் வைரலான வதந்திகள் பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.
தமிழகத்தில், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நள்ளிரவு கூடியதால் வாகன ஓட்டிகள் பூதியடைந்தனர். அதேபோன்று சென்னையில் பட்டரவாக்கம் மற்றும் அய்யப்பாகம், அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளி பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்று தங்களது வாகனங்களின் டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச் சென்றதாலும், கேன், பாட்டில்களில் வாங்கிச் சென்றதால் வணிக ரீதியிலான வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
90 நாள்களுக்கான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது
அதேநேரத்தில், நாடு முழுவதும் 90 நாள்களுக்கு போதிய அளவுக்கு எரிப்பொருள் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார்.
மேலும், வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும்.
டீலர்களுக்கு கடனில் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.
Panic buying grips motorists as huge crowds queue up at a petrol bunk to fill petrol and diesel following the LPG shortage crisis for the past two days and rumours of a fuel price hike from tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.