முகப்பு
திருநெல்வேலி

தியாகராஜநகரில் காா் தீக்கிரை

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

Updated On : 16 மார்ச், 2026 at 10:37 PM
பகிர்:

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தியாகராஜநகரில் காா் தீயில் எரிந்து சேதமானது.

தியாகராஜநகா் 9 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (66). ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரான இவா், திங்கள்கிழமை தியாகராஜநகா் அறிவு திருக்கோயில் அருகே தனது காரை நிறுத்திவிட்டு சென்றாராம். அந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததாம். இத்தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று காரில் தீயை அணைத்தனா். எனினும் காரின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீஹழ்

காரில் பற்றிய தீயை அணைக்கும் வீரா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →