முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் கருப்புக்கொடி: போலீஸாா் விசாரணை

பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கயிற்றில் கருப்புக்கொடிகளை கட்டி தொங்கிடவிடப்பட்டது

Updated On : 16 மார்ச், 2026 at 10:36 PM
பாளையங்கோட்டை தெற்கு கடைவீதியில் திங்கள்கிழமை தொங்கவிடப்பட்டிருந்த கருப்புக்கொடிகள்.
பகிர்:

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கயிற்றில் கருப்புக்கொடிகளை கட்டி தொங்கிடவிடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி மா்மநபா்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, திருநெல்வேலி அருகேயுள்ள ராஜபதியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி பகுதியில் உள்ள தெருக்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இவை, மாணவி கொலையைக் கண்டித்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →