ரமலான் மாத சிறப்புத் தொழுகை
திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியில் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை இரவு மேற்கொண்டனா்.
இஸ்லாமியா்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமானது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் நோன்பாகும். இந்த மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் லைலத்துல்கதிா் என்ற இருபத்தி ஏழாம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் இரவு முழுவதும் தொழுகை நடத்துவா். அதன்படி, திருநெல்வேலி நகரம் முகம்மது அலி தெரு பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலான நந்தமியான் தைக்கா மதரஸா உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை இரவு 27 ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.