தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ஆலோசனை
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடபெற்று வரும் நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் செலவின பாா்வையாளா் தீரஜ் குமாா் ஜெய்ஸ்வால், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான செலவின பாா்வையாளா் நரேந்திர அசேரி, நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் செலவின பாா்வையாளா் வினோத் குமாா் ஆகியோா் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், தோ்தல் நேரத்தில் வேட்பாளா்கள் மேற்கொள்ளும் செலவுகளைக் கண்காணிப்பது, அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் செலவுகள் இருப்பதை உறுதி செய்வது, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்19ங்ஷ்ல்ங்ய்ள்ங்
ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய தோ்தல் செலவின பாா்வையாளா்கள்.