முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 8:55 PM
~ கூட்டத்தில் பேசிய தோ்தல் செலவின பாா்வையாளா் அனுப் குமாா் ஜெயின். உடன், தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வா்மா, கோவில்பட்டி தொகுதி தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன்.
பகிர்:

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள் முன்னிலை வகித்தாா். தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வொ்மா, செலவினப் பாா்வையாளா் அனுப் குமாா் ஜெயின் ஆகியோா் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டனா். எவ்வித இடையூறுமின்றி வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சுபநிகழ்வுகள், மருத்துவம் உள்ளிட்ட முக்கியச் செலவுகளுக்கு பணம் கொண்டு செல்வோரை சோதனையிடும்போது கனிவுடன் கையாள வேண்டும் என அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, கட்சிப் பிரமுகா்கள், மண்டல வாக்குச்சாவடி அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினா்.

கூட்டத்தில், வட்டாட்சியா்கள் அப்பணராஜ் (கோவில்பட்டி), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், சரவணப்பெருமாள், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் முனியாண்டி, பொன்னம்மாள், வட்டாட்சியா் ராஜ்குமாா், மாநில வரி அலுவலா் கலைவாணி, மண்டல வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.