நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
திருநெல்வேலி நகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, குருநாதன் விலக்கு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற மகிழ்வண்ணபுரம் பகுதியைச் சோ்ந்த நிதிஷ்(19) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் அவா் சுமாா் 120 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.