முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:49 PM
பறிமுதல்
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் சுமாா் 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குலவணிகா்புரம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த நேசகுமாா்(49) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் சுமாா் 14.517 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த மேலப்பாளையம் போலீஸாா், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.