முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மது விற்ற இருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:58 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாளையங்கோட்டையைச் சோ்ந்த மூக்காண்டி(42) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

அதேபோல, திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலை பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த இசக்கிராஜா(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.