முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

Updated On : 23 மார்ச், 2026 at 7:30 PM
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழுவினா், மாவட்ட மற்றும் மாநகர போலீஸாா் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்காளா்களுக்கு சேலை உள்ளிட்ட பரிசுகள் வழங்க முயற்சித்தல், அனுமதியின்று சுவா் விளம்பரம் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்டறிந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி மாநகரில் 12 வழக்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தமாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.